சீனாவின் உலகளாவிய வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் முதலாவது சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி! 

முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஷாங்காய் நகரில் தொடங்கியது. 

முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஷாங்காய் நகரில் தொடங்கியது. 

இப்பொருட்காட்சியில் 130-க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3000-க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்தப் பொருட்காட்சி சீனாவில் இறக்குமதியை மையமாக கொண்டு நடத்தப்படும் முதலாவது தேசிய நிலை பொருட்காட்சியாகும். 

இப்பொருட்காட்சி தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் சீனத் துணை வணிக அமைச்சர் வாங் பிங்னான் பேசும் போது, "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கு இது முக்கிய ஆதரவு நடவடிக்கையாகவும், உலகளவில் இணக்கமான கூட்டு வெற்றியை முன்னேற்றும் பன்னாட்டு நடவடிக்கையாகவும் திகழ்கின்றது" என்று  கூறினார்.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான கென்டக்கியின் பொருளாதார வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக அதிகாரி விவேக் சரின் இதுகுறித்து கூறும் போது, சீனாவுடன் பொருளாதார பாலங்களை கட்டி அமைப்பதற்கான சரியான தருணம் இது என்றார். மேலும் கென்டக்கி அரசு இதில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதோடு, மாநில ஆளுநர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி வைக்கவும் முடிவெடுத்தது. இந்த பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் என்றும், அதோடு இதில் கலந்து கொள்ளும் உயர் அதிகாரிகளில் அமெரிக்காவில் இருந்து செல்லும் ஒரே ஒரு ஆளுநர் இவர் மட்டுமே என்றும் தெரிவித்தார். மேலும் கெண்டக்கி பற்றி விளக்குவதற்கு எங்களுக்கு நல்ல வாய்ப்பு இது என நாங்கள் நம்புகிறோம் என்றும் எங்கள் மாநில பிரதிநிதி குழு விண்வெளி, தானியங்கி கருவிகள், மரச்சாமான்கள், மருந்துகள் மற்றும் ரப்பர் தொழில்கள் பற்றி விளக்கி கூறும் எனறும் தெரிவித்தார். 

கென்டக்கி மட்டும் 2016-இல் சீனாவிற்கு 1.76 பில்லியன் டாலர்கள் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த இறக்குமதி பொருட்காட்சியின் மூலம் சீனா உலகளாவிய வர்த்தகத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 8 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா இறக்குமதி செய்யும். 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறும்போது  சீனாவுக்கு  ஏற்றுமதி அளவை அதிகரிக்க விரும்பும் நாடுகளுக்கு புதிய வாய்ப்பாக இந்த கண்காட்சி அமையும் என்று சீனாவின் வர்த்தக துணை அமைச்சர் வாங் பிங்னன் கூறினார். 

மேலும் 45,000 சதுர மீட்டர் பரப்பளவில், வேளாண் பொருட்கள், ஆடைகள், மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

ஷாங்காய் இறக்குமதி பொருட்காட்சி சீனாவின் வர்த்தக நடைமுறைகளில் அர்த்தமுள்ள மற்றும் அளவிடக்கூடிய மாற்றங்களை கொண்டுவரும் என்றாலும் அமெரிக்கா மற்றும் பிற நிறுவனங்களுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தாது என்று ஷாங்காயில் அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் கென்னத் ஜாரெட் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com