3 புதிய மாடல்களில் மீண்டும் ஜாவா பைக்

மூன்று புதிய மாடல்களில் ஜாவா பிராண்ட் பைக்குகள் இந்திய சந்தையில் வியாழக்கிழமை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன.
3 புதிய மாடல்களில் மீண்டும் ஜாவா பைக்


மூன்று புதிய மாடல்களில் ஜாவா பிராண்ட் பைக்குகள் இந்திய சந்தையில் வியாழக்கிழமை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன.
மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான கிளாஸிக் லிஜெண்ட்ஸ், செக் குடியரசின் பிரபல பிராண்டான ஜாவா பைக்குகளை இந்தியாவில் தயாரித்து வருகிறது. இதன் விற்பனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று புதிய மாடல் ஜாவா பைக்குகளை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது. இதன்மூலம் இந்திய சந்தைகளில் அந்நிறுவனம் மீண்டும் களமிறங்கியுள்ளது.
அறிமுக நிகழ்ச்சியின்போது மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
எங்களின் இரு சக்கர வாகன வர்த்தகத்துக்கு இந்திய சந்தை மிகவும் பொருத்தமாக உள்ளது. அதனை உணர்ந்தே புதிய தயாரிப்புகளை தற்போது அறிமுகம் செய்துள்ளோம். மஹிந்திராவின் மதிப்புக்கு ஜாவா பிராண்ட் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.
ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்களிலும் 293சிசி திறன்கொண்ட லிக்யுட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.1.55 லட்சம் முதல் ரூ.1.89 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாடல்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. டிசம்பர் 7-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு ஜாவா பைக்குகள் விற்பனை செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com