வீடு தேடி வரும் வால்மார்ட்!

நமது உள்ளூர் மளிகைக் கடைகளிலேயே பொருளை மொத்தமாக வாங்கிவிட்டால், ஒரு அட்டைப் பெட்டியிலோ, சாக்குப் பையிலோ நம் வீட்டுக்கே 'கடைப் பையன்' கொண்டு தந்துவிடுவது வழக்கமாக இருக்கிறது.
வீடு தேடி வரும் வால்மார்ட்!

நமது உள்ளூர் மளிகைக் கடைகளிலேயே பொருளை மொத்தமாக வாங்கிவிட்டால், ஒரு அட்டைப் பெட்டியிலோ, சாக்குப் பையிலோ நம் வீட்டுக்கே 'கடைப் பையன்' கொண்டு தந்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கப் பதிவு செய்தால், வீடு தேடி வந்து அந்தப் பொருளைக் கொடுத்துவிடுகிறார்கள். இதுவும் புதிதல்ல.
ஆனால் பிரபல பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் இப்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது. ஓட்டுநரில்லா தானியங்கி கார் மூலமாக வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களை விநியோகம் செய்வது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கிறது அந்த நிறுவனம்! இந்த முயற்சியில் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இணைந்திருக்கிறது.
வீடுகளில் பொருள்களை டெலிவரி செய்யும் திறனுள்ள தானியங்கி வாகனங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஃபோர்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. எந்தெந்தப் பொருள்களை தானியங்கி கார்களில் டெலிவரி செய்ய முடியும், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் சாதனத்தை எவ்வகையில் பேக்கேஜ் செய்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 
காய்கறிகளை எப்படி பேக் செய்வது, ஒரே ஓட்டத்தில் பல சாதனங்களை பல்வேறு வாடிக்கையாளர் வீட்டுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது, வாடிக்கையாளர் வீட்டு வாசலில் டெலிவரி கார் நின்றதும் அதன் கதவைத் திறந்து, அவர் ஆர்டர் செய்த குறிப்பிட்ட பொருளை மட்டும் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றி பெரிய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது!
இந்த கார் உருவாக்கத்துக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஃபோர்டு நிறுவனம் 400 கோடி டாலர் (சுமார் ரூ. 28,000 கோடி) முதலீடு செய்யவிருக்கிறது. ஓட்டுநர் தேவையில்லாத தானியங்கி கார்களின் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தியை 2021-ஆம் ஆண்டு தொடங்குவோம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.   
பல்வேறு பயன்பாட்டுக்கு உதவும் தானியங்கி கார்கள் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதைத் தவிர கூகுள் போன்ற நிறுவனங்களும் ஓட்டுநரில்லா வாகனத்தை அமெரிக்கா முழுவதும் ஓட்டி சோதனை செய்துள்ளது.
சிறு ரக ஆளில்லா விமானம் மூலம் ஆன்லைன் ஆர்டர் சாதனங்களை வாடிக்கையாளர் வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் சோதனையை அமேஸான் ஏற்கெனவே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. "வாசல் வரை ஷாப்பிங்' என்று கூறும் காலம் அதிக தூரத்தில் இல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com