பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 46.36 கோடி

இந்தியாவில் இணையதள பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி பிராட்பேண்ட் (அகண்ட அலைவரிசை
பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 46.36 கோடி


இந்தியாவில் இணையதள பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி பிராட்பேண்ட் (அகண்ட அலைவரிசை சேவை) வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46.36 கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டு ஜூலையில் பிராட்பேண்ட் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 46.02 கோடியாக இருந்தது. இந்த நிலையில், ஒரே மாதத்தில் அதன் எண்ணிக்கை 0.74 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியைடந்துள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் அந்த எண்ணிக்கை 46.36 கோடியை தொட்டுள்ளது.
ஒட்டுமொத்த தொலைபேசி எண்ணிக்கை ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்டில் 97.3 லட்சம் அதிகரித்து 118.91 கோடியாக இருந்தது. இதில், கம்பிவட (வயர்லைன்) தொலைபேசி இணைப்புகள் சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம், கம்பியில்லா (வயர்லெஸ்) தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 0.84 சதவீதம் அதிகரித்து 116.7 கோடியாக இருந்தது.
தொலைபேசி இணைப்பு அதிகரிப்பை பொருத்தவரையில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இங்கு சாதனை அளவாக ஆகஸ்டில் 19,35,584 தொலைபேசி இணைப்புகள் அதிகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து பிகாரில் 10,26,007 இணைப்புகளும், மத்திய பிரதேசத்தில் 9,61,251 இணைப்புகளும் உயர்ந்துள்ளன.
அதேசமயம், ஜம்மு & காஷ்மீரில் முந்தைய மாதத்தைக் காட்டிலும் ஆகஸ்டில் 1,72,445 தொலைபேசி இணைப்புகள் குறைந்துள்ளன. ஒட்டுமொத்த இணைப்புகளில் வயர்லெஸ் பிரிவின் பங்களிப்பு 98.13 சதவீதமாகவும், வயர்லைன் தொலைபேசி இணைப்பு 1.87 சதவீதமாகவும் உள்ளன.
நடப்பாண்டு ஆகஸ்ட் நிலவரப்படி, மொத்த தொலைபேசி இணைப்புகளில் பொதுத் துறை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் பங்களிப்பு 11.12 சதவீதம் என்ற அளவிலும், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 88.88 சதவீதமாகவும் இருந்தன.
பகுதிய வாரியான தொலைபேசி சேவையில் உத்தர பிரதேசம் (கிழக்கு) 8.62% உடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மத்திய பிரதேசம் (8.12%), ஆந்திரம் (7.40%), பிகார் (7.38%), தமிழகம் (7.05%) ஆகியவை உள்ளன என்று புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com