சென்செக்ஸ் 792 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கரடியின் பிடியில் சிக்கி அதிக இழப்பை சந்தித்தன.
சென்செக்ஸ் 792 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கரடியின் பிடியில் சிக்கி அதிக இழப்பை சந்தித்தன.

அனைவரும் எதிர்பாராத வகையில் ரிசர்வ் வங்கி அதன் நிதி கொள்கை ஆய்வில் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவித்தது. இந்த அறிவிப்பு சந்தைகளுக்கு சாதகமாக அமையவில்லை. 
இந்த நிலையில், அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பும் 18 காசுகள் சரிந்து முன்னெப்போதும் காணப்படாத வகையில் 73.76-ஆக குறைந்தது. இதுவும், பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட வழி வகுத்தது.
ஓஎன்ஜிசி பங்கின் விலை அதிகபட்சமாக 15.93 சதவீதம் இழப்பை கண்டது. அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலையும் 6.31 சதவீதம் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிந்து 34,376 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 282 புள்ளிகள் குறைந்து 10,316 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com