மறுபடியும் சரிந்த இந்தியப் பங்குச் சந்தை

கடந்த வாரம் தொடர்ந்து 3 நாள் சரிவுக்குப் பிறகு திங்கள்கிழமை உயர்ந்த மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை மீண்டும் சரிவைச் சந்தித்தது.
மறுபடியும் சரிந்த இந்தியப் பங்குச் சந்தை


கடந்த வாரம் தொடர்ந்து 3 நாள் சரிவுக்குப் பிறகு திங்கள்கிழமை உயர்ந்த மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை மீண்டும் சரிவைச் சந்தித்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சியடைந்ததாலும் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கடந்த 5 நாள்களில் நான்காவது முறையாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையில் ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருள்கள், மனை வணிகம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்தனர்.
அந்த நிலையில், அதிகபட்சமாக 34,6451 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் 34,233 புள்ளிகள் வரை கீழிறங்கியது. எனினும், இறுதியில் சென்செக்ஸ் 34,299 புள்ளிகளில் நிலைத்தது.
இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 175 புள்ளிகள் (0.51%) சரிந்தது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டியும் 47புள்ளிகள் (0.45%) சரிந்து 10,301புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com