தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.3,146: மத்திய அரசு

மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,146-ஆக நிர்ணயித்துள்ளது.
தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.3,146: மத்திய அரசு

மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,146-ஆக நிர்ணயித்துள்ளது.
 மத்திய அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் விற்பனை திங்கள்கிழமை (அக்.15) தொடங்கி வெள்ளிக்கிழமை (அக்.19) வரை நடைபெறவுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அக். 23-இல் தங்கப் பத்திரங்கள் விநியோகம் செய்யப்படும்.
 தற்போது வெளியிடப்படும் தங்கப் பத்திரங்கள் விலையை கிராமுக்கு ரூ.3,146-ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
 தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வெளியீட்டு விலையிலிருந்து ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 வங்கிகள், பங்கு விற்பனை மையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் ஆகியவற்றின் மூலமாக தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
 இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட தங்கப் பத்திர வெளியீடு வரும் நவம்பர் 5-ஆம்தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நவம்பர் 13-இல் தங்கப்பத்திரங்கள் விநியோகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து டிசம்பர் 24-28-இல் மூன்றாம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு இருக்கும். அதற்கான பத்திர விநியோகம் ஜன.1- 2019-இல் மேற்கொள்ளப்படும். இறுதி கட்ட தங்கப் பத்திர வெளியீடு பிப்ரவரி 4-8-இல் நடைபெறும்.
 தங்கத்துக்கான தேவையை குறைத்து, உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு, தங்கப் பத்திர திட்டத்தை கடந்த 2015 நவம்பரில் தொடங்கியது.
 இத்திட்டத்தில் ஒருவர் நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 500 கிராம் வரையிலான தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு 2.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com