ஹெச்யுஎல் லாபம் ரூ.1,525 கோடி

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் (ஹெச்யுஎல்) இரண்டாவது காலாண்டில் ரூ.1,525 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
ஹெச்யுஎல் லாபம் ரூ.1,525 கோடி

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் (ஹெச்யுஎல்) இரண்டாவது காலாண்டில் ரூ.1,525 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.1,276 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 19.51 சதவீதம் அதிகம்.
 நிறுவனத்தின் விற்பனை ரூ.8,199 கோடியிலிருந்து 11.45 சதவீதம் அதிகரித்து ரூ.9,138 கோடியாக இருந்தது.
 சென்ற மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு ரூ.1 முக மதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.9 ஈவுத் தொகை வழங்க நிறுவனத்தின் நிர்வாக குழு முடிவெடுத்துள்ளது என ஹிந்துஸ்தான் யுனிலீவர், செபியிடம் தெரிவித்துள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com