சுடச்சுட

  
  Toyota-Kirloskar


  டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 11.47 சதவீதம் அதிகரித்துள்ளது.
  இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
  டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 14,581 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 13,081 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 11.47 சதவீதம் அதிகமாகும்.
  உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வாகன விற்பனை 12,017 என்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரித்து 14,100-ஆக இருந்தது.
  அதேசமயம், எடியோஸ் கார்களின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 1,064 என்ற எண்ணிக்கையிலிருந்து 54.8 சதவீதம் சரிவடைந்து 481-ஆக காணப்பட்டது.
  அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட டுயல் டோன் லிவா கார்களுக்கு சந்தையில் வரவேற்பு பெருகியதையடுத்து ஆகஸ்ட் மாத விற்பனை சிறப்பான அளவில் அமைந்தது. 
  அபரிமிதமான பருவமழை மற்றும் விழாக்கால கொண்டாட்டங்களையடுத்து வரும் மாதங்களில் கிராமப்புறங்களில் வாகனங்களுக்கான தேவை சூடுபிடிக்கும் என டொயோட்டா கிர்லோஸ்கர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai