முதலீட்டாளர்களின் புகார் எண்ணிக்கை 6 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

சென்ற நிதியாண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர்களின் புகார் எண்ணிக்கை 6 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு


சென்ற நிதியாண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து செபி அமைப்பின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீதான முதலீட்டாளர்களின் புகார்களின் எண்ணிக்கை சென்ற நிதியாண்டில் 43,131-ஆக அதிகரித்துள்ளது. இது, 2016-17 நிதியாண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து வந்த புகார்களின் எண்ணிக்கையான 40,000-த்துடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம்.
இதற்கு முன்பாக, கடந்த 2011-12 நிதியாண்டில்தான் அதிகபட்சமாக 46,548 புகார்கள் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டது.
நடப்பாண்டு மார்ச் மாத நிலவரப்படி ஒட்டுமொத்த அளவில் செபி 30,46,585 புகார்களை பதிவு செய்துள்ளது. கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 30,03,454-ஆக காணப்பட்டது. அதேசமயம், நிலுவையில் உள்ள புகார்களின் எண்ணிக்கை 4,476-லிருந்து 3,771-ஆக சரிந்துள்ளது.
நிலுவையில் உள்ள மொத்த புகார்களின் எண்ணிக்கையில், 647 புகார்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் உள்ளதாக செபி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிலுவையில் வைக்கப்படும் நிறுவனங்கள் தொடர்பான முதலீட்டாளர்களின் புகார்களின் எண்ணிக்கை முன்பு அதிகரித்து வந்தது. இந்த நிலையில், செபி அமைப்பு துரித கதியில் புகார் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியதையடுத்து அந்த எண்ணிக்கை தற்போது நிலையான அளவில் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com