சென்செக்ஸ் 372 புள்ளிகள் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு உயர்வால் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து சென்செக்ஸ் 372 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளர்களை
சென்செக்ஸ் 372 புள்ளிகள் அதிகரிப்பு


ரூபாய் மதிப்பு உயர்வால் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து சென்செக்ஸ் 372 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தின் இடையே 65 காசுகள் அதிகரித்து 71.53 ஆக காணப்பட்டது. அத்துடன், ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கமானது நான்கு மாதங்களில் இல்லாத அளவில் குறைந்தததாக மத்திய அரசு தெரிவித்த புள்ளிவிவரமும் சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவும் சந்தைக்கு சாதகமாகவே இருந்தது.
இதுபோன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்தனர். 
வேதாந்தா பங்கின் விலை அதிகபட்சமாக 5.25 சதவீதம் அதிகரித்தது. பவர் கிரிட், ஏஷியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, யெஸ் வங்கி பங்குகளின் விலையும் 3.31 சதவீதம் வரை உயர்ந்தன. அதேசமயம், இன்ஃபோசிஸ், கோல் இந்தியா பங்குகள் மட்டும் இழப்பைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 372 புள்ளிகள் உயர்ந்து 38,090 புள்ளிகளில் நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 145 புள்ளிகள் அதிகரித்து 11,515 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com