மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய சி-கிளாஸ்' கார்

சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய சி-கிளாஸ்' என்ற டீசல் காரை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய சி-கிளாஸ்' கார்


சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய சி-கிளாஸ்' என்ற டீசல் காரை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) மைக்கேல் ஜோப்  கூறியதாவது:
இந்திய சந்தைகளில் முதல் முறையாக ஐந்தாம் தலைமுறைக்கான சி-கிளாஸ்' கார் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பிஎஸ்-4 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மொத்தம் மூன்று மாடல்களில் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சி 220 டி பிரைம் மாடல் விலை ரூ.40 லட்சமாகவும், சி220 டி புராக்ரஸிவ் மாடல் விலை ரூ.44.25 லட்சமாகவும், உயர்ரக சி 300 டி ஏஎம்ஜி மாடலின் விலை ரூ.48.50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சி 200 டி மற்றும் சி 300 டி ஏஎம்ஜி கார்களில் நான்கு சிலிண்டர் ஓஎம் 654 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
சி 220 டி மாடலின் விற்பனை தொடங்கப்பட்டு விட்டது. அதேசமயம், சி 300 டி மாடல் விற்பனை டிசம்பர் காலாண்டிலிருந்து தொடங்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com