புதிய நிதியாண்டை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்

புதிய நிதியாண்டின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் முன்னெப்போதும் காணப்படாத வகையில் முதல்
புதிய நிதியாண்டை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்


புதிய நிதியாண்டின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் முன்னெப்போதும் காணப்படாத வகையில் முதல் முறையாக  39,115 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சீன-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம், சீனா தயாரிப்பு துறையின் உற்பத்தியில் காணப்படும் விறுவிறுப்பு மற்றும் ரிசர்வ் வங்கி நிதி கொள்கையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை பங்கு வர்த்தகத்தில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தின. இதையடுத்து, உலோகம், மோட்டார் வாகனம், எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறை நிறுவன பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.
டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, பார்தி ஏர்டெல், மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஹெச்சிஎல் டெக் பங்குகளின் விலை 7.37 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 307 புள்ளிகள் வரை உயர்ந்து வரலாற்றில் முதல் முறையாக 39,115 புள்ளிகளை தொட்டிருந்தது. இந்த நிலையில், பிற்பகல் வர்த்தகத்தில் மந்த நிலை காணப்பட்டதால் சென்செக்ஸ் 198 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 38,871 புள்ளிகளில் நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 31 புள்ளிகள் அதிகரித்து 11,655 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com