இந்தோனேஷிய இனிப்பூட்டிகளுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி: வர்த்தக அமைச்சகம் பரிந்துரை

இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இனிப்பூட்டியான சாக்கரின் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு, மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்தோனேஷிய இனிப்பூட்டிகளுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி: வர்த்தக அமைச்சகம் பரிந்துரை


இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இனிப்பூட்டியான சாக்கரின் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு, மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
சாக்கரின் இனிப்பூட்டியை இந்தோனேஷியா அதிக அளவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், அதன் உண்மை மதிப்பை விட விலை குறைவாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனால், இந்தியாவில் இனிப்பூட்டியை உற்பத்தி செய்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பொது வர்த்தகத் தீர்வுகள் துறை (டிஜிடிஆர்) இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டது.
 இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை அந்தத் துறை வெளியிட்டது. அதில், இந்தோனேஷிய இனிப்பூட்டிகள் குறைவான விலையில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகார் உண்மையே. இதனால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதைத் தடுக்க, சாக்கரின் மீது டன்னுக்கு சுமார் ரூ. 1.14 லட்சம் மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க டிஜிடிஆர் பரிந்துரை செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில், மத்திய நிதியமைச்சகம் இறுதி முடிவு எடுக்கவுள்ளது. சர்க்கரையை விட 500 மடங்கு அதிக இனிப்புத்தன்மை கொண்ட சாக்கரின், உணவுப் பொருள்களிலும், உணவகங்களிலும், மருந்துப் பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014-15 ஆம் ஆண்டு 421 டன்னாக இருந்த இந்தோனேஷிய சாக்கரின் இறக்குமதி, கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 543 டன்னாக அதிகரித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com