சுடச்சுட

  
  infosys


  தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய் ரூ.21,539 கோடியாக உயர்ந்துள்ளது.
  இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களின் நான்காம் காலாண்டு நிதி நிலை செயல்பாடுகள் முதல் முறையாக ஒரே சமயத்தில் வெளியாகின. நிதி நிலை முடிவு குறித்து இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சலீல் பரேக் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டு முழுவதும் நிறுவனத்தின் செயல்பாடு வலுவான நிலையில் வேகமெடுத்து காணப்பட்டது. அதன் காரணமாக, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வருவாய் ரூ.21,539 கோடியானது. 2017-18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.18,083 கோடியுடன் ஒப்பிடும்போது இது 19.1 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்த நிகர லாபம் 10.5 சதவீதம் உயர்ந்து ரூ.4,078 கோடியாக இருந்தது. கடந்த முழு நிதியாண்டில் வருவாய் 17.2 சதவீதம் உயர்ந்து ரூ.82,675 கோடியாக இருந்தது. இருப்பினும், நிகர லாபம் 3.9 சதவீதம் குறைந்து ரூ.15,410 கோடியானது. 
  நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் நிலையான கரன்ஸி மதிப்பு அடிப்படையில் வருவாய் வளர்ச்சியானது 7.5-9.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai