சுடச்சுட

  

  தங்கத்துக்கு தர நிர்ணய முறையை நெறிப்படுத்த வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th April 2019 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தங்கத்துக்கு தரம் நிர்ணயம் செய்யும் ஹால்மார்க் முறையை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆபரண வர்த்தகர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
   இதுகுறித்து இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சில் (ஜிஜேசி), மத்திய நுகர்வோர் விவகாரத்தை அமைச்சகத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
   தங்கத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் ஹால்மார்க் முத்திரை பெறும் நடைமுறையில் பல்வேறு வகையான தர அளவுகோல்கள் பின்பற்றப்படுகின்றன.
   இது, இத்துறையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. எனவே, ஹால்மார்க் முத்திரையை பெறுவதற்கான நடைமுறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவில் நெறிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் ஜிஜேசி வலியுறுத்தியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai