மாருதி செலிரியோ விற்பனை 1 லட்சத்தை தாண்டியது

மாருதி சுஸுகி இந்தியாவின் (எம்எஸ்ஐ) தயாரிப்பான செலிரியோ கார் விற்பனை கடந்த நிதியாண்டில் 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி செலிரியோ விற்பனை 1 லட்சத்தை தாண்டியது

மாருதி சுஸுகி இந்தியாவின் (எம்எஸ்ஐ) தயாரிப்பான செலிரியோ கார் விற்பனை கடந்த நிதியாண்டில் 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து எம்எஸ்ஐ தெரிவித்துள்ளதாவது:
 கடந்த 2018-19 நிதியாண்டில் 1,03,734 செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து ஒட்டுமொத்தமாக 4.7 லட்சம் செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 இவ்வகை கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுவதன் காரணமாக கடந்த நிதியாண்டில் அந்த மாடலின் விற்பனை மட்டும் 10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக எம்எஸ்ஐ தெரிவித்துள்ளது.
 செலிரியோ கார்களில் 1000 சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் மேனுவல் கியர் பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வகை கார்கள் லிட்டருக்கு 23.1 கி.மீ. வரையில் மைலேஜ் தரவல்லது. அதேபோன்று, சிஎன்ஜியில் இயங்கும் செலிரியோ கார்கள் ஒரு கிலோ எரிவாயுவுக்கு, 31.76 கி.மீ வரை மைலேஜ் தரும் என எம்எஸ்ஐ தெரிவித்துள்ளது.
 இதற்கு முன்பு, இந்நிறுவனத்தின் இதர தயாரிப்புகளான, விட்டாரா பிரெஸ்ஸா, டிசையர், பலேனோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர், ஆல்டோ உள்ளிட்ட மாடல்களின் ஆண்டு விற்பனை 1 லட்சத்தை தாண்டி ஏற்கெனவே சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com