
தங்கத்துக்கு தரம் நிர்ணயம் செய்யும் ஹால்மார்க் முறையை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆபரண வர்த்தகர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சில் (ஜிஜேசி), மத்திய நுகர்வோர் விவகாரத்தை அமைச்சகத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தங்கத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் ஹால்மார்க் முத்திரை பெறும் நடைமுறையில் பல்வேறு வகையான தர அளவுகோல்கள் பின்பற்றப்படுகின்றன.
இது, இத்துறையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. எனவே, ஹால்மார்க் முத்திரையை பெறுவதற்கான நடைமுறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவில் நெறிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் ஜிஜேசி வலியுறுத்தியுள்ளது.