சுடச்சுட

  
  sensex

  நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியதன் காரணமாக தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமான திங்கள்கிழமையன்றும் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
   தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவு சந்தைகளில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்தடுத்து வரவுள்ள நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் சிறப்பாகவே இருக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் உருவானதையடுத்து பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
   இதுதவிர, அமெரிக்க-சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு சர்வதேச சந்தையில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. அதுவும், இந்தியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு உறுதுணையாக இருந்தது.
   முதலீட்டாளர்கள் போட்டிபோட்டு வாங்கியதையடுத்து, உலோகம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், தொலைத்தொடர்பு துறை குறியீட்டெண்கள் 2.24 சதவீதம் வரை அதிகரித்தன.
   நிறுவனங்களைப் பொருத்தவரையில், முதலீட்டாளர்களின் ஏகோபித்த ஆதரவால் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 7.04 சதவீதம் வரை உயர்ந்தது. டிசிஎஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்சிஎல் டெக், கோட்டக் வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்டி வங்கி மற்றும் பஜாஜ் ஆட்டோ பங்குகளின் விலை 4.78 சதவீதம் வரை அதிகரித்தன.
   அதேசமயம், வருவாய் மதிப்பீடு குறித்த கவலையால் இன்ஃபோசிஸ் பங்கின் விலை 2.83 சதவீதம் சரிந்தது.
   மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்ந்து 38,905 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 11,690 புள்ளிகளில் நிலைத்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai