ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி! ஒரே நாளில் 25 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை செலவாணி வர்த்தகத்தில் 25 காசுகள் சரிவடைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை செலவாணி வர்த்தகத்தில் 25 காசுகள் சரிவடைந்தது.
 செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 69.07-ஆக இருந்தது. இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு வரவேற்பு பெருகியதையடுத்து ரூபாய் மதிப்பு 69.46-வரை சரிந்தது.
 இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு, இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு வரத்து கணிசமாக அதிகரிப்பு போன்றவற்றால் ரூபாய் மதிப்பில் ஏற்படவிருந்த பெரும் சரிவு கட்டுக்குள் வந்தது.
 செலாவணி சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து 69.42-ஆனது.
 இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் தலைவர் வி.கே.சர்மா கூறியதாவது:
 மகாவீர் ஜயந்தியை முன்னிட்டு பங்கு மற்றும் செலாவணி சந்தைகளுக்கு புதன்கிழமை விடுமுறையாகும். அதேபோன்று, புனித வெள்ளி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி அன்றைய தினமும் பெரும்பாலான நிதி சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இவற்றை மனதில் கொண்டு செலவாணி வர்த்தகர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டது ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழி வகுத்தது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com