சுடச்சுட

  

  சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்

  By DIN  |   Published on : 17th April 2019 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  CHOLA

  சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், இடர் மேலாண்மை முறையை சிறப்பாக பயன்படுத்தியமைக்காக டியூவி இந்தியா வழங்கும் ஐஎஸ்ஓ 31000:2018 தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
   இதுகுறித்து சோழா எம்எஸ் நிர்வாக இயக்குநர் எஸ்எஸ் கோபாலரத்னம் கூறியதாவது:
   சோழா எம்எஸ், இடர் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய கடமையாக கருதி செயல்பட்டு வருகிறது. மேலும், இத்துறையில் சர்வதேச தரத்துக்கு இணையான அளவீடுகளை கட்டமைப்பதில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. அவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
   ஐஎஸ்ஓ 31000:2018 தரச் சான்றிதழ் பெற்ற பொதுக் காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இது, எங்களின் "விஷன் 2025' திட்டத்துக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார் அவர்.
   இந்த ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai