சுடச்சுட

  

  இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் எழுச்சியுடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சங்களைத் தொட்டன.
   சராசரி மழைப்பொழிவு இருக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மதிப்பீடு, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்தனர்.
   மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 369 புள்ளிகள் அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக 39,275 புள்ளிகளில் நிலைத்தது.
   அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 96 புள்ளிகள் உயர்ந்து 11,787 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தில் நிலைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai