சுடச்சுட

  

  வாடிக்கையாளர் விரும்பும் வரையில் டீசல் கார் உற்பத்தி தொடரும்: மாருதி சுஸுகி

  By DIN  |   Published on : 17th April 2019 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, வாடிக்கையாளர்கள் விரும்பும் வரையில் டீசல் கார்கள் உற்பத்தியை தொடரப் போவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. டீசல் கார்கள் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தப் போவதாக வெளியான தகவலையடுத்து அந்நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.
   இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி.பார்கவா பிடிஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   வாடிக்கையாளர்கள் வாங்க முடியாத நிலைக்கு வருவதை உணர்ந்த போதுதான் டீசல் கார்களை உற்பத்தி செய்வதில்லை என்று தெரிவித்திருந்தோம். தற்போதைய நிலையில், அவர்கள் விரும்பும் வரையில் மாருதி சுஸுகியின் டீசல் கார் உற்பத்தி தொடரும்.
   சிலர் மாடல் டீசல் கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதையடுத்து, அவர்களுக்கு அதனை நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கும். எங்களது அனைத்து முடிவுகளும் வாடிக்கையாளர்களை சார்ந்தது. எதை அவர்கள் வாங்குவார்கள் அல்லது வாங்கமாட்டார்கள் என்பதை பொருத்தே முடிவு இருக்கும்.
   சிறிய வகை டீசல் கார்களின் விலை அதிகமாக இருக்கையில் அது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கும். விலை அதிகமாகிக் கொண்டிருக்கும்போது, எந்தவொரு நிறுவனமும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட டீசல் கார் உற்பத்தியில் ஆர்வம் காட்டாது என்பதே உண்மை.
   அடுத்தாண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-4 மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்யும் விதத்தில் வெளிவரும் கார்களின் விலை அதிகமாகவே இருக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai