விப்ரோ லாபம் ரூ.2,493 கோடி

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பெங்களூரைச் சேர்ந்த விப்ரோ நான்காம் காலாண்டில் ரூ.2,493.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
விப்ரோ லாபம் ரூ.2,493 கோடி

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பெங்களூரைச் சேர்ந்த விப்ரோ நான்காம் காலாண்டில் ரூ.2,493.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் விப்ரோ நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.15,006.3 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.13,768.6 கோடியாக இருந்தது.
 நிகர லாபம் ரூ.1,800.8 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.2,493.9 கோடியானது. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2018-19 முழு நிதியாண்டில் வருவாய் 7.5 சதவீதம் உயர்ந்து ரூ.58,584.5 கோடியாகவும், நிகர லாபம் 12.6 சதவீதம் அதிகரித்து ரூ.9,017.9 கோடியாகவும் இருந்தது.
 ரூ.10,500 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 32.3 கோடி பங்குகளை ஒரு பங்கு ரூ.325 என்ற விலையின் அடிப்படையில் திரும்பப் பெறப்படும் என்று மும்பை பங்குச் சந்தையிடம் விப்ரோ தெரிவித்துள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com