சாந்தி கியர்ஸ் நிகர லாபம் ரூ.6 கோடி

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ்  நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.6.01 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.  
சாந்தி கியர்ஸ் நிகர லாபம் ரூ.6 கோடி

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ்  நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.6.01 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.  
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற 2018-19 நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.62.67 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 
கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.58.79 கோடியாக காணப்பட்டது.
அதேசமயம், நிகர லாபம் ரூ.9.62 கோடியிலிருந்து ரூ.6.01 கோடியாக குறைந்துள்ளது.
மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.231.47 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.254.77 கோடியாகி உள்ளது. நிகர லாபமும் ரூ.28.58 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.33.35 கோடியை எட்டியுள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு இறுதி ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.1 வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. 
இதையடுத்து, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கு ஒட்டுமொத்த அளவில்  பங்கு ஒன்றுக்கு ஈவுத்தொகையாக ரூ.6 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு முறை அறிவிக்கப்பட்ட சிறப்பு இடைக்கால ஈவுத்தொகை ரூ.5-ம் அடங்கும்.
வருவாய் வளர்ச்சி, லாபம் ஈட்டல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து  செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் சாந்தி கியர்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com