சுடச்சுட

    
    tvs


    சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜூலை மாதத்தில் 12.98 சதவீதம் குறைந்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    சென்ற ஜூலையில் நிறுவனத்தின் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 2,79,465-ஆக இருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு இதேகாலகட்டத்தில் நிறுவனம் விற்பனை செய்த 3,21,856 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 12.98 சதவீதம் குறைவாகும்.
    மதிப்பீட்டு மாதத்தில், மொத்த இருசக்கர வாகன விற்பனை 3,07,856 என்ற எண்ணிக்கையிலிருந்து 13.7 சதவீதம் சரிவடைந்து 2,65,679-ஆனது.  உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை 2,47,382 என்ற அளவிலிருந்து 15.72 சதவீதம் குறைந்து 2,08,489-ஆனது.
    மோட்டார்சைக்கிள் விற்பனை 1,21,434-லிருந்து 10.88 சதவீதம் குறைந்து 1,08,210-ஆகவும், ஸ்கூட்டர் விற்பனை 1,18,996-லிருந்து 11.59 சதவீதம் சரிந்து 1,05,199-ஆகவும் இருந்தது.
    நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை 13,323 என்ற எண்ணிக்கையிலிருந்து 3 சதவீதம் வளர்ச்சி கண்டு 13,786-ஆனது.
    நிறுவனத்தின் மொத்த வாகன ஏற்றுமதி 72,242-லிருந்து 3.11 சதவீதம் குறைந்து 69,994-ஆக இருந்தது என அந்த அறிக்கையில் டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.   
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai