அசோக் லேலண்ட் வாகன விற்பனை 28% சரிவு

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜூலை மாதத்தில் 28 சதவீதம் சரிந்துள்ளது.
அசோக் லேலண்ட் வாகன விற்பனை 28% சரிவு


ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜூலை மாதத்தில் 28 சதவீதம் சரிந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்ற ஜூலை மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் 10,927 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2018 இதே காலகட்டத்தில் விற்பனையான 15,199 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் குறைவாகும். மாத்த உள்நாட்டு வாகன விற்பனை 14,205 என்ற எண்ணிக்கையிலிருந்து 29 சதவீதம் சரிந்து 10,101-ஆக இருந்தது. நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனை உள்நாட்டு சந்தையில் 41 சதவீதம் சரிவைக் கண்டு 10,152-லிருந்து 6,018-ஆக இருந்தது.
இலகு ரக வர்த்தக வாகன விற்பனை 4,053-லிருந்து சற்று அதிகரித்து 4,083-ஆக காணப்பட்டது என அந்த அறிக்கையில் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com