சுடச்சுட

  
  tata


  உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் சென்ற ஜூலை மாதத்தில் 32,938 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 50,100 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 34 சதவீதம் குறைவாகும். 
  உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிந்து 10,485-ஆனது. வணிக பயன்பாட்டுக்கான வாகன விற்பனை 34,817 என்ற எண்ணிக்கையிலிருந்து 36 சதவீதம் குறைந்து  22,453-ஆனது.
  நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி (பயணிகள் மற்றும் வர்தத்தக வாகனம்) ஜூலை மாதத்தில் 32 சதவீதம் வீழ்ச்சியைடந்து 3,374-ஆக இருந்தது என டாடா மோட்டார்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai