"உடான்' 3-ஆம் கட்ட திட்டம்

இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களை குறைந்த கட்டணத்திலான விமான சேவையின் மூலம் இணைக்க "உடான்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
"உடான்' 3-ஆம் கட்ட திட்டம்

இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களை குறைந்த கட்டணத்திலான விமான சேவையின் மூலம் இணைக்க "உடான்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்த திட்டத்தின் மூலம் பிரபல சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் விரைவாக இணைக்கப்பட்டு வருகின்றன.
 அந்த வகையில் தற்போது 50 சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட நகரங்களை இணைக்க 235 புதிய விமான வழித்தடங்களில் "உடான்' 3-ஆம் கட்ட திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆயத்தமாகியுள்ளது. "உடான்' மூலம் எதிர்காலத்தில் மொத்தம் 192 விமான நிலைய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. அதில், 49 திட்டங்களுக்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

பயன்படுத்தப்படாத விமான நிலையங்கள் 16    
மிக குறைந்த பயன்பாடு விமான நிலையங்கள் 17
பயன்படுத்தப்படும் விமான நிலையங்கள் 50    
வாட்டர் ஏரோட்ரோம் 6

ஆண்டு இருக்கைகள்: மொத்தம் 69.30 லட்சம்   
                                                 நிலையான பிரிவு 52.39 லட்சம்
                                                 சுற்றுலா பகுதிகள் 15.73 லட்சம்     
                                                கடல்விமானம் 1.18 லட்சம்

வாட்டர் ஏரோட்ரோம்: குவாஹாட்டி பிரம்மபுத்ரா நதிக்கரை, நாகர்ஜுனா சாகர், சபர்மதி  நதிக்கரை, சத்ருன்ஜய் அணை,  ஒற்றுமை சிலை, உம்ரங்சோ நீர்த்தேக்கம்.

கடல்விமான வகைகளின் செயல்பாடு

பிரிவு 1ஏ: கடல்விமானத்தில் ஒன்பதுக்கும் குறைவான இருக்கைகள் 
பிரிவு 1: கடல்விமானத்தில் 9-20 இருக்கைகள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com