சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா லாபம் ரூ.118 கோடி

பொதுத் துறையைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா முதல் காலாண்டில் ரூ.118.33 கோடி லாபம் ஈட்டியது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா லாபம் ரூ.118 கோடி

பொதுத் துறையைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா முதல் காலாண்டில் ரூ.118.33 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் தெரிவித்துள்ளதாவது: 
நடப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.6,493.55 கோடியாக அதிகரித்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.5,904.82 கோடியாக காணப்பட்டது.
கடந்த 2018-19 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் வங்கிக்கு ரூ1,522.24 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைந்ததையடுத்து நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி ரூ.118.33 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.
மதிப்பீட்டு காலாண்டில், மொத்த வாராக் கடன் விகிதம் 22.17 சதவீதத்திலிருந்து 19.93 சதவீதமாக குறைந்தது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 10.58 சதவீதத்திலிருந்து 7.98 சதவீதமாக சரிந்தது.
ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மொத்த வாராக் கடன் ரூ.38,777.66 கோடியிலிருந்து ரூ.32,908.44 கோடியாக குறைந்தது. நிகர வாராக் கடனும் 16,086.25 கோடியிலிருந்து ரூ.11,440.59 கோடியாக சரிந்தது.
முதல் காலாண்டில் வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.2,538.14 கோடியிலிருந்து ரூ.897.42 கோடியாக கணிசமாக குறைந்தது என செபியிடம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com