சுடச்சுட

  
  wheelsind


  டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.11.62 கோடியாக இருந்தது. 
  இதுகுறித்து வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம் திங்கள்கிழமை கூறியதாவது: 
  நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வீல்ஸ் இந்தியா நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ரூ.713.31 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த 2018-19 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.748.59 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். 
  வருவாய் குறைந்து போனதையடுத்து, நிகர லாபம் ரூ.18.01 கோடியிலிருந்து ரூ.11.62 கோடியாக சரிந்துள்ளது.
  கடந்த மார்ச் 31உடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் மொத்த  வருவாயாக ரூ.3,188.84 கோடியை ஈட்டியுள்ளது. நிகர லாபம் ரூ.75.67 கோடியாக காணப்பட்டது.
  காற்றாலைப் பிரிவை பொருத்தவரையில் முதல் காலாண்டில் உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தைகள் இரண்டிலும் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. இதைத் தவிர, ரயில்வே, ஏர் சஸ்பென்ஷன் பிரிவு வர்த்தகமும் முதல் காலாண்டில் சிறப்பாகவே இருந்தது. இந்த வளர்ச்சி வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai