பங்கு சந்தை கடும் வீழ்ச்சியுடன் முடிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
பங்கு சந்தை கடும் வீழ்ச்சியுடன் முடிவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள், மோட்டார் வாகன துறையில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை உள்ளிட்டவை பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் ஆர்வத்தில் தடையை ஏற்படுத்தின.

நிஃப்டியில் யெஸ் வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, யுபிஎல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் இன்று நஷ்டத்தில் முடிந்தது.

அதே சமயம் லாபம் ஈட்டிய பங்குகள் பட்டியலில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, கெயில் மற்றும் ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் முன்னிலை வகித்தது.

சென்செக்ஸ் 623.75 புள்ளிகள் சரிந்து 36,958.16 ஆகவும், நிஃப்டி 183.80 புள்ளிகள் சரிந்து 10,925.90 புள்ளிகளாகவும் இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சுமார் 870 பங்குகள் முன்னேறியும், 1621 பங்குகள் சரிந்தும், 144 பங்குகள் எந்தவித மாற்றமின்றி பங்கு சந்தையின் வர்த்தகம் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com