சுடச்சுட

  

  பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 623 புள்ளிகள் சரிவு

  By DIN  |   Published on : 14th August 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stock


  சர்வதேச அளவில் காணப்பட்ட சாதகமற்ற நிகழ்வுகளால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் பெரும் சரிவைக் கண்டது. சென்செக்ஸ் 623 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
  அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர், ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளால் சர்வதேச பங்குச் சந்தைகளில் லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறினர். 
  குறிப்பாக, ஆர்ஜெண்டினா, ஹாங்காங் சந்தைகளில் இந்த நிலை மிகவும் தீவிரமாக காணப்பட்டது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.
  உலக நிலவரங்களைத் தவிர்த்து, உள்நாட்டு நிலவரங்களைப் பொருத்தவரையில், பொருளாதார வளர்ச்சியில் காணப்பட்டு வரும் தேக்க நிலை, பல்வேறு துறைகளில் நுகர்வோர் தேவை குறைந்துள்ளது ஆகியவையும் இந்தியப் பங்குச் சந்தைகளின் சரிவுக்கு மேலும் வழிவகுப்பதாக அமைந்தது.
  சென்செக்ஸ் பட்டியிலில் இடம்பெற்றுள்ள யெஸ் வங்கி, மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, மாருதி சுஸுகி, டாடா ஸ்டீல், எல் & டி பங்குகளின் விலை 10.35 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
  அதேசமயம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்கு விற்பனையை மேற்கொள்ளவுள்ளதாக வெளியான அறிவிப்பையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 9.72 சதவீதம் அளவுக்கு மிகப்பெரிய ஏற்றம் கண்டது.
  மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 623 புள்ளிகள் (1.66%) வீழ்ச்சி கண்டு 36,958 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி183 புள்ளிகள் (1.65%) சரிந்து 10,925 புள்ளிகளாக நிலைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai