சுடச்சுட

  

  உற்பத்தி பணிகள் தற்காலிக நிறுத்தம்: சுந்தரம்-கிளேட்டன், ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு

  By DIN  |   Published on : 17th August 2019 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tvs


  டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் சென்னையில் உள்ள பாடி தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளை இரண்டு நாள்களுக்கு நிறுத்தவுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
  அதன்படி, இந்நிறுவனம் ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 
  இதனைத் தொடர்ந்து, அதே தேதிகளில் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான லூகாஸ்-டிவிஎஸும் உற்பத்தி பணிகளை நிறுத்துவதாக கூறியுள்ளது.
  இந்நிறுவனங்களைத் தவிர, இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்பும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான நான்கு நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
  மோட்டார் வாகன துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக அத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தங்கள் ஆலைகளில் தற்காலிகமாக மூடி உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
  இம்மாதத்தின் தொடக்கத்தில், ஆட்டோ உதிரிபாக தயாரிப்பில் முன்னணியில் உள்ள பாஷ் நிறுவனம், தமிழகத்தில் கங்கைகொண்டானில் அதற்கு சொந்தமான ஆலை மற்றும் மகாராஷ்டிரத்தில் நாசிக் ஆலை ஆகியவற்றில் மொத்தம் 13 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நடப்பு காலாண்டில் 8 முதல் 14 நாள்கள் வரையில் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில், மேலும் பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது அத்துறையைச் சேர்ந்த பணியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai