பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடக்கத்தில் இழப்பைச் சந்தித்த போதிலும் பிற்பகலில் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது.
பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்


இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடக்கத்தில் இழப்பைச் சந்தித்த போதிலும் பிற்பகலில் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது.
சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இல்லாதது, அந்நிய முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்ற நிகழ்வுகளால் பங்குச் சந்தைகளில் சுணக்க நிலை ஏற்பட்டு தொடக்கத்தில் இழப்பை சந்தித்தது.
இருப்பினும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சலுகை அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பால் சந்தை இறுதியில் சிறிய ஏற்றத்தைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில், மோட்டார் வாகனம், மின்சாரம், வங்கி, தொலைத்தொடர்பு, நிதி, கட்டுமான துறை குறியீட்டெண்கள் 1.50 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. அதேநேரம், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, உலோகம், மருந்து துறைகளின் குறியீட்டெண்கள் 0.78 சதவீதம் வரை குறைந்தன.
யெஸ் வங்கி பங்கின் விலை அதிகபட்சமாக 3.79 சதவீதம் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ பங்குகளின் விலையும் உயர்ந்தன.
ஆட்டோ நிறுவனங்களைப் பொருத்தவரையில், மாருதி சுஸுகி பங்கின் விலை அதிகபட்ச ஏற்றத்தைக் கண்டது. அதைத் தொடர்ந்து, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்டு மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகளின் விலையும் உயர்ந்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைக்காத காரணத்தால், டிசிஎஸ், வேதாந்தா, ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 38 புள்ளிகள் உயர்ந்து 37,350 புள்ளிகளாக நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 18 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,047 புள்ளிகளாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com