பொருளாதார வளர்ச்சிக்கே முன்னுரிமை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு முடிவுகளை மேற்கொண்டு வருகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கே முன்னுரிமை: ரிசர்வ் வங்கி ஆளுநர்


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு முடிவுகளை மேற்கொண்டு வருகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இந்திய தொழில், வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் சார்பில் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் சக்திகாந்த தாஸ் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது: நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது. நாட்டின் வளர்ச்சியில் ஏற்படும் சரிவு கவலையளிப்பதாக இருந்தாலும், எதிர்மறையான பார்வைகளால் எந்த பயனும் விளையப் போவதில்லை. தற்போதைய தருணத்தில், நேர்மறையான பார்வையே முக்கியம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. வங்கி சாராத நிதி நிறுவனத் துறையில் அண்மைக் காலமாக நிலவும் பிரச்னைகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. அத்தகைய நிறுவனங்கள், திவால் ஆகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திவால் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களால், வங்கிகள் பெரிதும் பயனடையும். பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 6 பொதுத் துறை வங்கிகள், தங்களது டெபாசிட்கள் மற்றும் கடன்களை ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்துள்ளன. மற்ற வங்கிகளும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com