Enable Javscript for better performance
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: மூடிஸ்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: மூடிஸ்

    By DIN  |   Published on : 24th August 2019 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modys


    சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ்,  நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என குறைத்து மதிப்பீடு செய்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
    மூடிஸ் நிறுவனத்தின் முந்தைய மதிப்பீட்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2019-ஆம் ஆண்டில் 6.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, பல்வேறு துறைகளில் பணியமர்த்தல் நடவடிக்கையில் காணப்படும் மந்த நிலை, கிராமப்புற குடும்பங்களில் காணப்படும் இடர்பாட்டு நிலை, நிதி நிலையில் காணப்படும் நெருக்கடி தன்மை ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.2 சதவீத அளவிலான வளர்ச்சி விகிதத்தை மட்டுமே தக்கவைக்கும்.
    அதேபோன்று, வரும் 2020-ஆம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி முந்தைய மதிப்பீடான 6.7 சதவீதத்திலிருந்து 0.6 சதவீதம் குறைந்து 6.1 சதவீதமாக மட்டுமே இருக்கும். 
    16 ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் குறிப்பாக, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் மந்த நிலையில் உள்ளது. 2018-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய சரிவு நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மூடிஸ் கூறியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai