பங்குச் சந்தையில் திடீர் எழுச்சி

வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் வெளிநாட்டு முதலீட்டு தொகுப்புகளுக்கான வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெறும் என்ற எதிர்பார்ப்பால் மூன்று நாள்கள் பின்னடைவைச் சந்தித்த
பங்குச் சந்தையில் திடீர் எழுச்சி


வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் வெளிநாட்டு முதலீட்டு தொகுப்புகளுக்கான வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெறும் என்ற எதிர்பார்ப்பால் மூன்று நாள்கள் பின்னடைவைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்தைக் கண்டன.  
பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கும் மேல் சரிவடைந்து காணப்பட்டது. இந்த நிலையில், மாலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் என்ற தகவல் வெளியானது. அதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி சலுகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பால்,  உலோகம், எண்ணெய்-எரிவாயு, மோட்டார் வாகனம்,  தொழில்நுட்பத் துறை நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனப் பங்கின் விலை 4.26 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 3.25 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 0.61 சதவீதமும் உயர்ந்தன. ஐடிசி, ஹெச்யுஎல் நிறுவனங்களின் பங்குகள் விலை 1.71 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 228 புள்ளிகள் அதிகரித்து 36,701 புள்ளிகளாக நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 10,829 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com