டெபாசிட்டுகளுக்கான வட்டி குறைப்பு: எஸ்பிஐ 

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு கால அளவுகளைக் கொண்ட குறித்தகால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு கால அளவுகளைக் கொண்ட குறித்தகால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 7-45 நாள்கள் வரையிலான முதிர்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தற்போதைய 5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 46-179 நாள்கள், 180-1 ஆண்டுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
 1-2 ஆண்டு முதிர்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு 6.70 சதவீதமாக்கப்பட்டுள்ளது. மேலும், 5-10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டியும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்கில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வைக்கப்படும் தொகைக்கு 3 சதவீத வட்டியும், ரூ.1 லட்சம் வரையிலான தொகைக்கு 3.50 சதவீத வட்டியும் எப்போதும் போல் தொடரும். இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என அந்த அறிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த டெபாசிட் வட்டி குறைப்பு நடவடிக்கையை அடுத்து, இன்னும் பிற வங்கிகளும் வட்டி குறைப்பு அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com