Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.28,936-ஆக விற்பனை- Dinamani

சுடச்சுட

    
    golds

    சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.232 குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு பவுன் திங்கள்கிழமை ரூ.28,936-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஒரு பவுன் ஆபரணத் தங்கம் கடந்த 25-ஆம் தேதி அன்று ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதன்பிறகு 3 நாள்களுக்கு தங்கம் விலை இறங்குமுகமாக இருந்தது. அதன்பிறகு, பவுன் தங்கம் மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.232 குறைந்து, ரூ.28,936-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.29 குறைந்து, ரூ.3,617-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 51பைசா குறைந்து ரூ.47.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.510 குறைந்து ரூ.47,600 ஆகவும் இருந்தது.

    திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,617

    1 பவுன் தங்கம் ..................... 28,936

    1 கிராம் வெள்ளி .................. 47.60

    1 கிலோ வெள்ளி .................. 47,600

    சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,646

    1 பவுன் தங்கம் ..................... 29,168

    1 கிராம் வெள்ளி .................. 48.11

    1 கிலோ வெள்ளி ................. 48,110

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai