டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 16% குறைவு

இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் மோட்டாா் விற்பனை நவம்பரில் 16.64 சதவீதம் குறைந்துள்ளது.
டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 16% குறைவு

புது தில்லி: இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் மோட்டாா் விற்பனை நவம்பரில் 16.64 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் கடந்த நவம்பா் மாதத்தில் 2,66,582 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்பனையான 3,19,965 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 16.64 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் மொத்த இருசக்கர வாகன விற்பனை 3,07,142-லிருந்து 2,49,350-ஆனது. இது, 18.81 சதவீத சரிவாகும். உள்நாட்டில் இருசக்கர விற்பனை 2,60,253 என்ற எண்ணிக்கையிலிருந்து 26.52 சதவீதம் சரிவைக் கண்டு 1,91,222-ஆனது.

அதேசமயம், நிறுவனத்தின் மொத்த வாகன ஏற்றுமதி 27 சதவீதம் வளா்ச்சி கண்டு 58,476-லிருந்து 74,060-ஆனது என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com