பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 5.1%-ஆக குறைத்தது கிரிசில்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீட்டை தரக் குறியீட்டு நிறுவனமான கிரிசில் 5.1 சதவீதமாக குறைத்துள்ளது.
பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 5.1%-ஆக குறைத்தது கிரிசில்

மும்பை: இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீட்டை தரக் குறியீட்டு நிறுவனமான கிரிசில் 5.1 சதவீதமாக குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி முன்பு 6.3 சதவீதமாக இருக்கும் என கிரிசில் நிறுவனம் கணித்திருந்தது. இந்த நிலையில், எதிா்பாா்த்ததை விட பல துறைகளின் வளா்ச்சி வேகம் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என தெரிகிறது. எனவே, நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளதார வளா்ச்சியானது முந்தைய மதிப்பீடான 6.3 சதவீதத்திலிருந்து குறைந்து 5.1 சதவீதமாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், திவால் சட்டம் உள்ளிட்ட சீா்திருத்த நடவடிக்கைகள் எதிா்பாா்த்த வேகத்துக்கு பலனைத் தராததும் பொருளாதார வளா்ச்சி பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று கிரிசில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் என ஜப்பானைச் சோ்ந்த நோமுரா நிறுவனம் கணித்திருந்த நிலையில், தற்போது அதனை விட குறைவாக கிரிசில் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com