பப்ஜியை ஓரம்கட்டியது ‘கால் ஆஃப் டியூட்டி’விடியோ கேம்!

கால் ஆஃப் டியூட்டியைப் பொருத்தவரை, கூகுள் பிளே ஸ்டோரானது 89 மில்லியனுக்கும் அதிகமான தரவிறக்கங்களை உருவாக்கியது, அதாவது மொத்த விடியோ கேம் தரவிறக்கத்தில் 52 சதவீதம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
PUBG Mobile dethroned! Call of Duty
PUBG Mobile dethroned! Call of Duty

இன்றைய டிஜிட்டல் தலைமுறையினரால் விரும்பப்படும் ஆன்லைன் விடியொ கேம்களில் ஒன்றாக கால் ஆஃப் டியூட்டி இருந்து வருகிறது. உலகம் முழுக்க அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டு விற்பனையாகும் விடியோ கேம்களில் இன்று இது தான் நம்பர் ஒன். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த விடியோ கேம், மொபைல் போன்களிலும் ஆடத்தக்க வகையில் தனது தளங்களை மாற்றிக் கொண்டது. 

அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே மாதங்களில்  கால் ஆஃப் டியூட்டி Mobile (CODM)உலக விடியோ கேம் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் 87 மில்லியன் டாலர்களை அறுவடை செய்திருக்கிறது. அத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரண்டு மாதங்களில் 172 மில்லியன் தரவிறக்கங்களையும் சாதித்துள்ளது. இந்த அசகாய சூரத்தனமான வெற்றியை பப்ஜியுடன் ஒப்பிடுகையில் அது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நான்கு மாதங்களில் வெறும் 100 மில்லியன் தரவிறக்கங்களை மட்டுமே கண்டிருந்த நிலையில், கால் ஆஃப் டியூட்டி முதல் இரண்டு மாதங்களிலேயே 172மில்லியன் தரவிறக்கங்களைக் கண்டு பப்ஜியின் வெற்றியை ஓரம்கட்டி விட்டது என்கிறார்கள்  கேம் விற்பன்னர்கள்.

கால் ஆஃப் டூட்டி மொபைல் கேம்  கிட்டத்தட்ட 21 மில்லியன் தரவிறக்கங்களை கடந்த நவம்பர் மாதத்தில் கண்டது. அதே, அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது அதன் தரவிறக்கப்பட்டதற்கான பட்டியலில் மிகப்பெரிய மாற்றம், கிட்டத்தட்ட 146 மில்லியன் முறைகள் தரவிறக்கப்பட்டிருந்தது. ​​இதைப் பற்றிய கருத்துக் கணிப்புத் தகவல்களை பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவர் அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அன்ந்த அறிக்கையின்படி, இந்த விளையாட்டு அமெரிக்காவில் வெற்றிகரமாக உள்ளது, அங்கு கிட்டத்தட்ட 28.5 மில்லியன் இன்ஸ்டால்களை இந்த விளையாட்டு கண்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா 17.5 மில்லியன் இன்ஸ்டால்களுடன் இரண்டாம் இடத்திலும் 12 மில்லியன் இன்ஸ்டால்களுடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கால் ஆஃப் டியூட்டியைப் பொருத்தவரை, கூகுள் பிளே ஸ்டோரானது 89 மில்லியனுக்கும் அதிகமான தரவிறக்கங்களை உருவாக்கியது, அதாவது மொத்த விடியோ கேம் தரவிறக்கத்தில் 52 சதவீதம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதற்கிடையில், iOS போன்கள் மூலமாக கிட்டத்தட்ட 83 மில்லியன் தரவிறக்கங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது மொத்த இலக்கில் 48 சதவீதம் எனக் கொள்ளலாம்.
 
இந்த விளையாட்டு ஏன் மிகவும் பிரபலமானது? 

ரசிகர்கள் மில்லியன் கணக்கான முறைகளில் கால் ஆஃப் டூட்டி கேமை மொபைலில் பதிவு செய்கிறார்கள். சைமன் “கோஸ்ட்” ரிலே மற்றும் அலெக்ஸ் மேசன் போன்ற ரசிகர்களின் விருப்பங்களுடன் இப்போது கிடைக்கிறது.

தொலைபேசி, விளையாட்டாளர்கள் இதில் கா-கா(ga-ga.) கில்ஹவுஸ் (Kill house) மற்றும் கிராஸ்ஃபயர் (cross fire) உள்ளிட்ட விருப்பமான கேமிங் மோட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

பேட்டில் ராயலைத் தவிர இந்த  விளையாட்டில் உலகம் முழுவதும் விரும்பத்தக்க பிற அம்சங்கள்;

  • அனைவருக்கும் இலவசம் *: உன்னதமான ஒவ்வொரு வீரரும் டெத்மாட்ச் ஆக எண்ணிக் கொண்டு விளையாடலாம்.
  • முன்னணி **: ஒரு அணி தளத்தில் தோன்றிய பிறகு, எதிரணியினர் வீரர்களை தோற்கடிக்கலாம்.
  • அணி டெத்மாட்ச் **: எதிரணியில் உள்ள அனைத்து வீரர்களையும் தோற்கடிக்கக் கூடிய கிளாசிக் டெத் மேட்ச் மோட் வசதி உண்டு.
  • ஹார்ட் பாயிண்ட் **: புள்ளிகளைப் பெற ஹார்ட் பாயிண்ட்டைப் பிடிக்கவும்.
  • ஆதிக்கம் **: புள்ளிகளைப் பெற நியமிக்கப்பட்ட பதவிகளைப் பிடிக்கவும்.

இந்த விளையாட்டில், மொபைல் தலைப்புக்காக வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் 100 பயனர்கள் உயிர்வாழ்வதற்காக போராடுகிறார்கள், இதில் சோலோக்கள், இரட்டையர்கள் அல்லது நான்கு நபர்கள் கொண்ட அணிகளை அமைத்துக் கொண்டு கால் ஆஃப் டியூட்டி  கேமை நாம் ஆடலாம். ஏடிவி, ஹெலிகாப்டர் மற்றும் தந்திரோபாய ராஃப்ட் உள்ளிட்ட வாகனங்களுடன் இதில் வீரர்கள் நிலம், கடல் மற்றும் காற்று முழுவதும் சண்டையிடலாம்.

சமீபத்தில், ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும், கால் ஆஃப் டியூட்டி மொபைல் ஒரு மெகா புதுப்பிப்பை வெளியிட்டது, அதில் விடியோ கேமிங் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஜோம்பி பயன்முறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜோம்பி பயன்முறை ஒரு தனி விளையாட்டுப் பயன்முறையாகக் கிடைக்கிறது. இதன் உள்ளடக்கம் PUBG MOBILE ல் நாம் பார்த்ததிலிருந்து சற்று வித்தியாசமானது.

இதில் ஜோம்பி பயன்முறை, தற்போது, ​​இரண்டு வெவ்வேறு முறைககளில் அதாவது ‘ரெய்டு’ மற்றும் ‘சர்வைவல்’எனும் முறையில் பிரித்தளிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com