2020-ல் வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் கேம்ஸ்

கூகிள் ஸ்டேடியாவின் மந்தமான செயல்திறன் முதல் E3, 2019 இல் மோசமான டெவலப்பர் வரை கேமிங் துறைக்கான சர்ச்சைகள் நிறைந்திருந்தன. இருப்பினும், கேமிங் துறையில் ஒரு புதிய தொடக்கமானது ஏற்பட்டுள்ளது.
2020-ல் வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் கேம்ஸ்

கூகிள் ஸ்டேடியாவின் மந்தமான செயல்திறன் முதல் E3, 2019 இல் மோசமான டெவலப்பர் வரை கேமிங் துறைக்கான சர்ச்சைகள் நிறைந்திருந்தன. இருப்பினும், கேமிங் துறையில் ஒரு புதிய தொடக்கமானது ஏற்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டுகளின் பட்டியல் இங்கே:
 
சைபர்பங்க் 2077
இயங்குதளம்: பிஎஸ் 4, எக்ஸ்பாக்ஸ் ஒன், பிசி, ஸ்டேடியா

‘வி’ எனப்படும் ஒரு கதாபாத்திரம் கொண்ட வீரராக இருப்பார். வி கதாபாத்திரம் தனது முகம், சிகை அலங்காரங்கள், உடல் வகை, உடல் முறைகள், பின்னணி மற்றும் ஆடை ஆகியவற்றை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். வரைபடம் ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிடவையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். மேலும், கீனு ரீவ்ஸையும் கேமியோ கதாபாத்திரத்தில் காண முடியும். ஏப்ரல் 16, 2020 அன்று வெளியிடப்பட உள்ளது.

மைக்ரோசாப்ட் ஃபிளைட் சிமுலேட்டர் 2020
இயங்குதளம்: பிசி, எக்ஸ்பாக்ஸ் ஒன்

மிகவும் பிரபலமான இந்த விளையாட்டுத் தொடர் 80 களில் இருந்து வருகிறது. இருப்பினும், மைக்ரோசாப்ட் ஃபிளைட் சிமுலேட்டரின் புதிய வகை கிராஃபிக் திறனை அதிகப்படுத்தியுள்ளது. இந்த கேமில் விளையாடுபவர், எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் விமானத்தை உருவாக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளியீட்டுத் தேதி முறையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் 2020-ஆம் ஆண்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்வெல் அவென்ஜர்ஸ்
இயங்குதளம்: பிஎஸ் 4, எக்ஸ்பாக்ஸ் ஒன், பிசி, ஸ்டேடியா

அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம், உலகப் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்கள் நிறைந்த இந்த கேம், உயர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. மே 15, 2020-ல் வெளியாகிறது.

தி லாஸ்ட் ஆஃப் அஸ் பார்ட் II
இயங்குதளம்: பிஎஸ் 4

சோனி என்டர்டெய்ன்மெட் வெளியிட்ட நாட்டி டாக் தயாரித்த ஆக்ஷன் வகை கேம். வட அமெரிக்காவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எல்லி எனும் கதாபாத்திரத்தை கொண்டு இந்த கேமை விளையாட வேண்டும். வைரஸ் பாதித்த உயிரினங்களை எதிர்த்து விளையாட வேண்டும். முன்பை விட பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. மே 29, 2020-ல் வெளியாகிறது.

வாட்ச் டாக்ஸ்: லீஜியன்
இயங்குதளம்: பிஎஸ் 4, எக்ஸ்பாக்ஸ் ஒன், பிசி, ஸ்டேடியா

யுனைடட் கிங்டம் ஹேக்கர்களால் ஆக்கிரமிக்க திட்டமிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதில் தான் இந்த கேம் தொடங்குகிறது. தற்போது 3-ஆம் பதிப்பு வெளியிடப்படவுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் தனித்துவ சக்திகள் இடம்பெற்றுள்ளன. புதிய வெர்ஷனில் புதிய கதாப்பாத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. யூபிசாப்ட் இதை தயாரித்து, வடிவமைத்து வெளியிட்டுள்ளது. மார்ச் 6, 2020-ல் இந்த கேம் வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com