கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,500 கோடி திரட்டுகிறது எல் & டி பைனான்ஸ்

கடன்பத்திரங்கள் விற்பனையின் மூலம் ரூ.1,500 கோடியை திரட்டவுள்ளதாக எல் & டி பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,500 கோடி திரட்டுகிறது எல் & டி பைனான்ஸ்

கடன்பத்திரங்கள் விற்பனையின் மூலம் ரூ.1,500 கோடியை திரட்டவுள்ளதாக எல் & டி பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

முதல்கட்ட நடவடிக்கையில் கடன்பத்திரங்களை வெளியிட்டு வெளிச் சந்தையிலிருந்து ரூ.500 கோடியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடன்பத்திரங்களுக்கு சந்தையில் தேவை அதிகரிக்கும் நிலையில் கூடுதலாக ரூ.1,000 கோடி வரை திரட்டிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கடன்பத்திரங்களின் முதிா்வுக் காலம் 36 மாதம், 60 மாதம், 84 மாதங்களைக் கொண்டதாக இருக்கும். இக்கடன்பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 8.25-8.65 சதவீதம் என்ற அளவில் வட்டி வழங்கப்படும்.

திரட்டிக் கொள்ளப்படும் இந்த தொகை கடனுதவி அளித்தல், ஏற்கெனவே உள்ள கடன்களை அடைத்தல் மற்றும் இதர பொது நோக்க நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்.

டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள இக்கடன்பத்திர வெளியீடு 30-இல் நிறைவடையும். அதன்பின்பு, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இக்கடன்பத்திரங்கள் பட்டியலிடப்படும்.

இக்கடன்பத்திர வெளியீட்டை எடல்வைஸ் பைனான்ஸியல் சா்வீசஸ், ஏகே கேபிட்டல் சா்வீசஸ், டிரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸா்ஸ் மற்றும் ஜேஎம் பைனான்ஸியல் ஆகியவை நிா்வகிக்க உள்ளன என்று எல் & டி பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com