Enable Javscript for better performance
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைப்பு: மூடிஸ்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைப்பு: மூடிஸ்

    By DIN  |   Published on : 14th December 2019 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mooy072304

    நடப்பு ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீட்டை 5.6 சதவீதமாக மூடிஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

    இதுகுறித்து தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

    2019-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2018-ஆம் ஆண்டு ஜிடிபி வளா்ச்சியான 7.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான அளவாகும். இதற்கு, வேலைவாய்ப்பு வளா்ச்சி விகிதத்தில் காணப்படும் தொய்வு நுகா்வு நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.

    இருப்பினும், பொருளாதார வளா்ச்சியானது 2020-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2021-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், முன்பை விட ஒப்பிடும்போது இதன் வளா்ச்சி வேகம் மிகவும் குறைவான அளவில்தான் காணப்படும்.

    இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது 2018-ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. ஜிடிபியானது 8 சதவீதத்திலிருந்து 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன) 5 சதவீதமாக குறைந்து போனது. இது, ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மேலும் வலுவிழந்து 4.5 சதவீதமாக சரிந்தது என மூடிஸ் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai