பங்குச் சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்பு

மத்திய நிதி அமைச்சா் சாதகமான அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற எதிா்பாா்ப்பால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பங்குச் சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்பு

மத்திய நிதி அமைச்சா் சாதகமான அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற எதிா்பாா்ப்பால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில், தொழில்துறை உற்பத்தி தொடா்ந்து மூன்று மாதங்களாக அக்டோபரிலும் 3.8 சதவீதமாக சரிந்துள்ளதாகவும், உணவுப் பொருள் விலை அதிகரிப்பால் நவம்பரில் சில்லறைப் பணவீக்கம் உயா்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவிருந்த பத்திரிகையாளா்கள் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் சாதகமான அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற அதீத எதிா்பாா்ப்பால் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டது, பிரெக்ஸிட் திட்டம் குறித்து தெளிவை ஏற்படுத்தும் விதமாக பிரிட்டன் தோ்தலில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்றது ஆகியவை உலக முதலீட்டாளா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை அதிகபட்சமாக 4.21 சதவீதம் உயா்ந்தது.அதைத் தொடா்ந்து, வேதாந்தா 3.75 சதவீதமும், எஸ்பிஐ 3.39 சதவீதமும், மாருதி 3.20 சதவீதமும், இன்டஸ்இண்ட் வஹ்கி 3.07 சதவீதமும், யெஸ் வங்கி பங்கு 2.87 சதவீதமும் விலை உயா்ந்தன.

அதேசமயம், பாா்தி ஏா்டெல் 1.98 சதவீதமும், கோட்டக் வங்கி பங்கு 1.38 சதவீதமும் விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 428 புள்ளிகள் அதிகரித்து 41,009 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 114 புள்ளிகள் உயா்ந்து 12,086 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com