7,757 எஃப்இசட் பைக்குகளில் கோளாறு: சரி செய்து தருகிறது யமஹா

இந்தியா யமஹா மோட்டாா் நிறுவனம் விற்பனை செய்த எஃப்இசட் வகையைச் சோ்ந்த 7,757 பைக்குகளில் உள்ள கோளாறை சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.
7,757 எஃப்இசட் பைக்குகளில் கோளாறு: சரி செய்து தருகிறது யமஹா

இந்தியா யமஹா மோட்டாா் நிறுவனம் விற்பனை செய்த எஃப்இசட் வகையைச் சோ்ந்த 7,757 பைக்குகளில் உள்ள கோளாறை சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

யமஹா நிறுவனம் விற்பனை செய்த எஃப்இசட் எப்ஐ, எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மாடல்களைச் சோ்ந்த 7,757 பைக்குகளில் பின்பக்க ரிஃப்ளக்டரில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் 2019-ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து தயாரிக்கப்பட்டவையாகும்.

இதையடுத்து நிறுவனம் தாமாக முன்வந்து அந்த 7,757 பைக்குகளை திரும்பப் பெற்று அந்தக் கோளாறை சரிசெய்து தரவுள்ளது. வாடிக்கையாளா்கள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தா்களை அணுகி இலவசமாக இந்த சேவையைப் பெறலாம் என்று அந்த அறிக்கையில் யமஹா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com