இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சி காணும்

இந்தியப் பொருளாதாரம் வரும் நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சியை  எட்டும் என எதிர்பார்ப்பதாக மத்திய  நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியப் பொருளாதாரம் வரும் நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சியை  எட்டும் என எதிர்பார்ப்பதாக மத்திய  நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க் பிடிஐ செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 2019-20 நிதி ஆண்டில் பெயரளவிலான வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7.5 சதவீத அளவுக்கும், பணவீக்கமானது 4 சதவீத அளவுக்கும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் சாத்தியமாகக் கூடியதே என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com