டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை 11 காசுகள் உயர்ந்தது.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை 11 காசுகள் உயர்ந்தது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக நிர்ணயித்ததன் எதிரொலியால் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு கணிசமாக அதிகரித்தது. இதைத் தவிர, கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட சரிவு நிலை, அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு ஆகியவையும் ரூபாய் மதிப்பின் வலுவான ஏற்றத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 71.73-ஆக காணப்பட்டது. வர்த்தகத்தின் இடையே அதன் மதிப்பு 71.76-71.30-க்குள் காணப்பட்டது.
சாதகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களையடுத்து இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 71.45-இல் நிலைத்தது. 
கடந்த புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 1 காசு மட்டுமே உயர்ந்து 71.56 ஆக காணப்பட்டது. 
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மூன்று நாள்களாக ஏற்றத்தைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com